Enable Javscript for better performance
திமுக சார்பில் ஜூலை 26-இல் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    திமுக சார்பில் ஜூலை 26-இல் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி

    By dn  |   Published on : 16th July 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி திமுக சார்பில் வருகிற 26-ஆம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது.

    இது குறித்து, தருமபுரி மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தியறிக்கை: தருமபுரி மாவட்ட திமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி வருகிற 26-ஆம் தேதி பெரியார் மன்றத்தில் நடைபெற உள்ளது.

    போட்டிகளில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும்.

    இதில் பள்ளி மாணவ, மாணவியர், என்னருந் தமிழ் நாட்டின் கண் எனத் தொடங்கி ஆரிதைப் பகர்வார் இங்கே என முடியும் வரை உள்ள பாடலில் 24 வரிகள், வலியோர் சிலர் எளியோர்  தமை எனத் தொடங்கி இனிமேலிலை எனவே முரசறைவாய்! மரசறைவாய்! என முடியும் பாடலில் 32 வரிகளும் ஒப்புவித்தல் வேண்டும்.

    கல்லூரி மாணவ, மாணவியர், பொதிகை மலை விட்டெழுந்து சந்தனத்தின் எனத் தொடங்கி பாழாக்கி நாளும் அதில் கவலை கொள்ளேன் என முடியும் பாடலில் 24 வரிகள், பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு எனத் தொடங்கி வாழ் நின் வையத்து மாப்புகழ் நன்றே என முடியும் பாடலில் 27 வரிகளும் ஒப்புவித்தல் வேண்டும்.

    பேட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் ஒப்பனை அணிந்தோ, இசை அமைத்தோ பாடுதல் கூடாது.

    மாவட்ட அளவில் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம், ஆறுதல் பரிசாக 5 பேருக்கு ரூ.ஆயிரத்து ஐநூறு வழங்கப்படும்.

    ஏற்கெனவே கடந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்க இயலாது.

    மாவட்டத்தில் அளவிலான போட்டியில் முதலிடம் பெறுவோர் வருகிற செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி மற்றும் 3-ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான அளவிலானப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

    போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தருமபுரி மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி செல் 94437 55331, மாவட்ட இலக்கிய அணி முன்னாள் செயலாளர் பொன்.மகேஷ்வரன் செல் 94435 09472 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே, தருமபுரி மாவட்டத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்று பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai