Enable Javscript for better performance
தியாகிகள் குறை தீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி ஆட்சியரகத்தில் சுதந்திர போராட்டத் தியாகிகள் சிறப்பு குறை தீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வீட்டு மனைப் பட்டா, தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலாவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 39 மனுக்களை தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் மனுக்களை அளித்தனர்.

    கூட்டத்தில், வருகிற 26-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு சிறப்பு மருத்து முகாம் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், மாவட்ட ஆட்சியரிடன் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல் (பொறுப்பு), தனித் துணை ஆட்சியர் எஸ்.கிருஷ்ணன், இணை இயக்குநர் (மருத்துவம்) குணசுந்தரி, வேலை வாய்ப்பு அலுவலர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai