Enable Javscript for better performance
பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் காமராஜரின் 112வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜ் படத்துக்கு பள்ளித் தலைமையாசிரியர் வி.சந்திரசேகரன் மாலை அணிவித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பாலக்கோடு தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டத்துக்கு அரிமா சங்க முன்னாள் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். கிராம கல்விக்குழு பி.எல்.ரவி சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் என்.பரிதாஜான் நன்றி கூறினார்.

    கார்த்திகேயன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் மற்றும் குறிஞ்சி தமிழ் மன்ற தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அன்னை கஸ்தூரிபாய் சேவா சங்க அறக்கட்டளை நிறுவனர் தகடூர் வேணுகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    விழாவுக்கு பள்ளி தாளாளர் க.அருணகிரி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மு.ரூபிணி, மேலாளர் சா.சாந்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai