Enable Javscript for better performance
மின் இணைப்பை பெயர் மாற்றித் தர ரூ.1,000 லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய ஊழியர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மின் இணைப்பை பெயர் மாற்றித் தர ரூ.1,000 லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய ஊழியர் கைது

    By dn  |   Published on : 16th July 2014 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அருகே மின் இணைப்பு பெயர் மாற்றித் தர ரூ.1,000 லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய வருவாய் மேற்பார்வையாளரை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் செவ்வாயக்கிழமை கைது செய்தனர்.

    பாலக்கோடு வட்டம், கெண்டகஅள்ளி அருகே அத்தனூரைச் சேர்ந்தவர் த.மாதேஷ்(30). விவசாயியான இவர் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டை அண்மையில் விலைக்கு வாங்கி புதுப்பித்துள்ளார். மேலும் குணசேகரன் பெயரில் இருந்த மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்றுவதற்காக காரிமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

    இதனை மாற்றித் தருவதற்கு தருமபுரியைச் சேர்ந்த வருவாய் மேற்பார்வையாளர் பச்சியப்பன் ரூ.1,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாதேஷ் தருமபுரி ஊழல் தடுப்பு பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து, போலீஸாரின் அறிவுரையின்பேரில் காரிமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளர் பச்சியப்பனிடம் லஞ்சம் ரூ.ஆயிரத்தை மாதேஷ் கொடுத்துள்ளார்.

    அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் காதர், ஆய்வாளர் கிருஷ்ணராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பச்சியப்பனை கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai