Enable Javscript for better performance
அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்றதாக 7 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானம் விற்றதாக 7 பேர் கைது

    By அரூர்,  |   Published on : 17th July 2014 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூர் பகுதியில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபான புட்டிகளை விற்பனை செய்ததாக 7 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி வட்டாரப் பகுதியில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் மதுபான புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு புகார்கள் பல வந்தன.

    இதையடுத்து, அரூர் காவல் ஆய்வாளர் கே.பழனியப்பன் தலைமையிலான மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு அனுமதியின்றி மதுபானபுட்டிகளை விற்பனை செய்ததாக, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ராமியம்பட்டியைச் சேர்ந்த ரங்கன் மனைவி இந்திராணி (60), தாளநத்தத்தைச் சேர்ந்த நாராயணன் மனைவி ருக்மணி (57), அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி ராணி (57), ச.பட்டியைச் சேர்ந்த சின்னக்கொளந்தை மகன் தசரதன் (59), பொம்மிடியைச் சேர்ந்த பிலிப் மகன் நேவிஸ் (26), டி.அய்யம்பட்டியைச் சேர்ந்த சரவணன் மனைவி கமலா (55), வெங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த பொன்னுரங்கன் மகன் மகாலிங்கம் (53) ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    இவர்களிடமிருந்து 130-க்கும் மேற்பட்ட மதுபான புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai