ஊத்தங்கரையில் தமுமுக ஆர்ப்பாட்டம்
By ஊத்தங்கரை | Published on : 17th July 2014 03:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலைக் கண்டித்து தமுமுக சார்பில், ஊத்தங்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவர் யாசின் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எ.அல்தாப் அஹமது, மாவட்ட துணைத் தலைவர் எம்.வாஹித்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழகப் பேச்சாளர் நவ்ஷாத் கண்டன உரை நிகழ்த்தினார். இதில், மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்டப் பொருளாளர் அலாவுதீன், நகரச் செயலாளர் எ.சாதிக்பாஷா, ஒன்றியத் தலைவர் என்.கலில் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பதாகைகளை ஏந்திவாறு முழக்கங்களை எழுப்பினர். ஜாவித் நன்றி கூறினார்.