Enable Javscript for better performance
ஊத்தங்கரை அருகே அதிக மகசூல் தரும் காய் வகைகள்- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை அருகே அதிக மகசூல் தரும் காய் வகைகள்

    By ஊத்தங்கரை  |   Published on : 17th July 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள கல்லாவி, வேடப்பட்டியில் அதிக மகசூல் தரும் காய் வகைகளால் விவசாயி மகிழ்ச்சியடைந்துள்ளார்.

    வேடப்பட்டியில் சுமார்

    100-க்கும் மேற்ப்பட்ட விவசாய குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் தானிய வகைகள், கரும்பு, மஞ்சள், தக்காளி, நெல் போன்ற பயிர் வகைகளை விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியைச் சேர்ந்த வெள்ளைய கவுண்டர் மகன் சரவணன் (39). விவசாயி. இவருக்குச் சொந்தமான 2.5 ஏக்கரில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கமான பயிர் வகைகளைச் சாகுபடி செய்தார். கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் பகுதியில் புதிதாக புடலங்காய், பாகற்காய் ஆகிய இரண்டையும் சுமார் ஓர் ஏக்கரில் சாகுபடி செய்து பந்தல் அமைத்து பராமரித்தார்.

    பயிரிட்டு இரண்டரை மாதத்தில் கொடிகளில் காய்கள் காய்க்கத் தொடங்கின. கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக தினமும் 100 கிலோ முதல் 150 கிலோ வரை காய்களை அறுவடை செய்வதாகவும், புடலங்காய் ஒரு கிலோ ரூ.15-ம், பாகற்காய் கிலோ ரூ.30 வரை விற்பனை செய்வதாக அவர் தெரிவித்தார். ஒரு பாகற்காய் அரை கிலோ வரையும் புடலங்காய் ஒரு காய் 1.25 கிலோ வரையும் எடையுள்ளது. காய்கறிப் பயிரைச் சாகுபடி செய்ததில் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயி சரவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். இந்தப் பகுதியில் அன்மையில் மிதமான மழை பெய்து விவசாயத்துக்கு போதுமான நீர் ஆதாரம் கிடைத்துள்ளதாகவும். இது போன்ற பணப் பயிர் வகைகளை பயிர் செய்து விவசாயிகள் பயனடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai