Enable Javscript for better performance
ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்துள்ள ஏரிப்பள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி சிவராஜ். இவரது மகன் சக்திவேல் (15). இவர் பி.அக்ராஹரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில், உறவினரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லுக்கு சக்திவேல் புதன்கிழமை சென்றார்.

    அப்போது, முதலைப் பண்ணை எதிரே உள்ள ஆற்றுப் பகுதியில் அவர் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

    தகவலறிந்த தீயணைப்பு, மீட்புத் துறை மாவட்ட உதவி அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஒகேனக்கல் நிலைய அலுவலர் ஆர்.ஜானகிராமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாணவரை தீவிரமாகத் தேடினர்.

    சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, ஆற்றின் மையப் பகுதியில் சடலமாக மீட்டனர்.

    பின்னர், மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai