Enable Javscript for better performance
ஜூலை 20-இல் \\\"முதல்வன் \\\'விருது வழங்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் வகித்த மாணவர்களுக்கு முதல்வன் விருது வழங்கும் விழா வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து, அன்னை கஸ்தூரிபா சேவா சங்க நிறுவனர் தகடூர் ரா.வேணுகோபால் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநிலம், மாவட்டம், பள்ளிகளில் முதலிடம் பிடித்த 350 மாணவ, மாணவிகளுக்கு அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் வருகிற 20-ஆம் தேதி காமராஜர் பெயரில் முதல்வன் விருது வழங்கப்பட உள்ளது.

    இந்த விழாவுக்கு, சேவா சங்கத் தலைவர் சி.சக்திவேல் தலைமை வகிக்கிறார். திரைப்பட இயக்குநர் வா.கெளதமன், தமிழக அரசு முன்னாள் செயலாளர் துரை.சுந்த

    ரேசன், தமிழ்நாடு உப்புக் கழகம் மேலாண்மை இயக்குநர் சி.காமராஜ், உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai