Enable Javscript for better performance
தருமபுரியில் 144 தடை உத்தரவு நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி, அரூரில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நள்ளிரவு முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் நினைவு தினத்தையொட்டி, அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழக்கூடும் என்பதால் தருமபுரி வருவாய் வட்டத்தில் கடந்த 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில தினங்களில் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி நள்ளிரவு முதல் தருமபுரி, அரூர் வருவாய்க் கோட்டங்களில் மேலும் இரண்டு வாரங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

    இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, தருமபுரி, அரூர் வருவாய்க் கோட்டங்களில் 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நள்ளிரவு முதல் விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai