Enable Javscript for better performance
தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா

    Published on : 17th July 2014 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள மாட்டியாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை மா.சின்னமாது தலைமை வகித்தார். முன்னதாக, காமராஜர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில், மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், ஆசிரியர்கள் ராமன், கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல, தருமபுரி அருகேயுள்ள மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படை அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் து.ரவிக்குமார் தலைமை வகித்தார். விழாவில், காமராஜர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    மேலும், பேச்சு, வினாடி, வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில், ஆசிரியர்கள், டி.யமுனாபாய், ச.ரமேஷ், எஸ்.விக்ரமன், பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் மு.கா.நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பாலஜங்கமனஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கோ.மாது தலைமை வகித்தார். இதில், காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மு.பொன்முடி தலைமையில் காமராஜர் பிறந்த நாள், இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. இதில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 494 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர் எஸ்.ராகுலுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    அரூரில்

    அரூர் அருகேயுள்ள கே.வேட்ரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 112-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    பள்ளித் தலைமை ஆசிரியை க.விஜயா தலைமை வகித்தார்.

    இதில், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் 27 பேருக்கு ரூ.90 ஆயிரம் மதிப்பிலான பரிசுத் தொகைகளை அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான எம்.கேசவன் வழங்கினார்.

    தொடர்ந்து, பாட வாரியாக 100 சதத் தேர்ச்சிப் பெற்றுதந்த ஆசிரியர்கள் ஜெ.ரகுபதி, ஆர்.குமார், கே.மணிவேலு, ஆர்.ராமன், எம்.செண்பகம் ஆகியோருக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

    விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் கே.இளவரசன், உதவித் தலைமை ஆசிரியர் சி.காளியப்பன், தமிழாசிரியை ஆர்.ஜெயந்தி, ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர்கள் இ.பரமசிவம், எம்.வெங்கடேசன், ஜி.கைலாசம் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அன்னை மெட்ரிக். பள்ளி:

    அரூர் அருகேயுள்ள நம்பிப்பட்டி அன்னை மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அந்தப் பள்ளியின் தாளாளர் எஸ்.சர்ச்சில் தலைமை வகித்தார்.

    இதில், கல்வி நிறுவனப் பொருளாளர் கவிதா சர்ச்சில், பள்ளி முதல்வர் கே.நடராஜன், இயக்குநர் ஆர்.அத்தியப்பன், மேலாளர் ஏ.சுகுமார், கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் எம்.மகேந்திரன், பி.எட். கல்லூரி முதல்வர் எஸ்.நடராசன், ஒருங்கிணைப்பாளர் எஸ்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai