Enable Javscript for better performance
மக்கள் தொடர்பு முகாமில் நல உதவி அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நல்லம்பள்ளி ஒன்றியம், சிவாடியில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 134 பயனாளிகளுக்கு ரூ.32.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை அளிக்கப்பட்டன.

    முகாமிற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் தொடர்பான மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இதையடுத்து, 134 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் டி.ஸ்ரீதர், வருவாய்க் கோட்டாட்சியர் பி.மேனகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai