Enable Javscript for better performance
மான் வேட்டைக்கு முயற்சி: ரூ.40 ஆயிரம் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே மான் வேட்டைக்கு முயன்றதாக இருவருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் புதன்கிழமை விதிக்கப்பட்டது.

    அரூர் வட்டம், பொய்யப்பட்டி காப்புக்காட்டில் அடிக்கடி மான்கள் வேட்டையாடப்படுவதாகப் புகார்கள் பல வந்தன. இதையடுத்து, மொரப்பூர் வனச்சரகர் என்.ஆறுமுகம் தலைமையிலான வனத் துறையினர் வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, பொய்யப்பட்டி வனப் பகுதியில் கம்பி வலைகளுடன் சுற்றித் திரிந்த இருவரை வனத் துறையினர் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் அரூர் வட்டம், கௌôப்பாறையைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் ராஜேந்திரன் (34), வேடியப்பன் மகன் மாதேஸ் (25) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, இருவரையும் வனத் துறையினர் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியன் (அரூர்) உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai