Enable Javscript for better performance
வழித்தட பிரச்னையால் மோதல்: 9 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே பொதுவழித்தட பிரச்னையால், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, 9 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    அரூர் வட்டம், மாரப்பநாய்க்கன்பட்டியில் பொது வழித்தட பிரச்னை தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில், மாரப்பநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த கொளந்தை மகன் திருமால், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராக்கன் மகன் சின்னண்ணன் ஆகியோர் இடையே அண்மையில் தகராறு ஏற்பட்டதாம். சம்பவம் குறித்து இரு தரப்பினரும் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் தனித் தனியாகப் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில், மாரப்பநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த சின்னண்ணன் மகன் பழனி (45), தேசிங்கு மனைவி உஷா (38), பழனி மனைவி காஞ்சனா (44), பழனி மகன் ராகுல்காந்தி (44), கொளந்தை மகன் திருமால் (20), கொளந்தை மனைவி சின்னபாப்பா (54), சின்ன ஆதிமூலம் மகன் மந்திரி (40), மந்திரி மகன் அரவிந்தன் (24), மந்திரி மனைவி பாரதி (45) ஆகிய 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    மேலும், தலைமறைவாக உள்ள பெருமாள் மனைவி சரிதா (27), பழனி மகன் வேலு (எ) விக்னேஷ், சின்னண்ணன் மகன் தேசிங்கு, செல்வராக்கன் மகன் சின்னண்ணன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai