Enable Javscript for better performance
ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 18th July 2014 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு, இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெ.சிவராமன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு இளைநிலை உதவியாளர் பதவி உயர்வு அரசு விதிகளின் படி வழங்கி வருகிறது. இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பணியிடம், ஏற்கெனவே காலியாக உள்ள பணியிடம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு 5:1 என்ற விகிதாசார அடிப்படையில் பதவி உயர்வு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால், தருமபுரி மாவட்டத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பணியிடம், ஏற்கெனவே காலியாக உள்ள பணியிடம் என 15.3.2014-இன் படி 112 இடங்கள் காலியாக உள்ளன.

    இந்தப் பணியிடங்களுக்கு விகிதாசார அடிப்படையில் பதவு உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.

    எனவே, உடனடியாக பதவி உயர்வு வழங்க மறுத்துவரும் தருமபுரி மாவட்டக் கல்வி நிர்வாகத்தைக் கண்டித்து சங்கத்தின் சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம், தொடர் போராட்டங்கள் நடைபெற உள்ளன என அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai