Enable Javscript for better performance
எரிவாயு உருளைகளை பதுக்கி விற்றதாக இளைஞர் கைது - Dinamani

சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 10 உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மெணசி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகள் பதுக்கி விற்கப்படுவதாக உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, அந்த பிரிவின் துணை வட்டாட்சியர் சரவணன், ஆய்வாளர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் மெணசி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது, அங்கிருந்த நெல் அரைவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மெணசியைச் சேர்ந்த தமிழ்வேந்தன் (35) கைது செய்யப்பட்டார்.

    ரேஷன் அரிசி பறிமுதல்... பொம்மிடி ரயில் நிலையம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த 300 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்த அரிசி மூட்டைகள் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai