Enable Javscript for better performance
தொழில் முனைவோர் வரைபட ஒப்புதல் பெற நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதிதாக ஆரம்பிக்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு வரைபட ஒப்புதல், இதர ஆரம்ப வேலைக்கான இடர்பாடுகளை களைய குழுவில் விண்ணப்பித்தால் விரைந்து பெற்றுத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதமொரு முறை ஒரு முனை தீர்வு குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தின் மூலம் புதிதாக தொழில் தொடங்குவதற்கான வரைபட ஒப்புதல், கட்டட உரிமம் போன்றவை தீயணைப்பு, நகர் ஊரமைப்பு, உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறையிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, தொழில்முனைவோர் மாவட்ட தொழில் மையத்தை அணுகி விண்ணப்பித்தால் விரைந்து பெற்றுத் தரப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai