Enable Javscript for better performance
பெண்ணிடம் தங்க நகைகள் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கம்பைநல்லூர் அருகே பெண்ணிடம் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    அரூர் வட்டம், சேக்காண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரகு மனைவி சுகுணா (34). இவர் கம்பைநல்லூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில், புதன்கிழமை இரவு 8 மணியளவில் பணி முடிந்து மொபெட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சேக்காண்டஹள்ளி பிரிவு சாலையில் அவரது வாகனத்தை வழிமறித்த மூவர், அவரிடமிருந்த தங்க வளையல், தோடு உள்ளிட்ட 8 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து சுகுணா அளித்த புகாரின் பேரில், கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai