Enable Javscript for better performance
மொரப்பூர் கொங்கு கல்லூரியில் கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    மொரப்பூர் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

    "முன்னேறும் இந்தியாவின் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு அந்தக் கல்வி நிறுவனத்தின் தலைவர் கே.ராஜாமணி தலைமை வகித்தார்.

    கல்லூரி மாணவர்களின் சிந்தனைகள், நோக்கம், வேலைத் தேடும் முறைகள், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வழிமுறைகள், எதையும் உற்றுநோக்கம் பண்புகள், உயர் கல்வி சிந்தனைகள், ஆராய்ச்சிப் படிப்புகள் ஆகியவை குறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வாணையர் (பொறுப்பு) அ.இளங்கோவன் பேசினார்.

    கருத்தரங்கில் கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலர் எம்.சாமிக்கண்ணு, பொருளாளர் பி.வரதராஜன், நிர்வாக அலுவலர் ஏ.மோகன்ராசு, கொங்கு மெட்ரிக் பள்ளியின் தாளாளர் டி.சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரமணி, துணை முதல்வர் வேலுமணி, கல்லூரி மாணவர்கள், உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai