Enable Javscript for better performance
வட்டாட்சியர் மீது கேபிள் டிவி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    வட்டாட்சியர் மீது கேபிள் டிவி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

    By தருமபுரி  |   Published on : 18th July 2014 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேபிள் உபகரணங்களை சேதப்படுத்துவதுடன், கையூட்டு கேட்கும் தனி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை திரண்ட 100-க்கும் அதிகமான கேபிள் டிவி உரிமையாளர்கள் அளித்த மனு விவரம்:

    தருமபுரி மாவட்டத்தில் 666 கேபிள் டிவி உரிமையாளர்கள் அரசு அனுமதி பெற்று தொழில் நடத்தி வருகிறோம். அரசுக்கு பணம் செலுத்த தவறும்பட்சத்தில் கேபிள் சிக்னலை துண்டிக்க உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் கேபிள்களை நீண்ட தொலைவுக்கு துண்டு துண்டாக வெட்டி சேதப்படுத்தப்படுகின்றன.

    இதுதவிர கேபிள் டிவி கார்ப்பரேஷன் தனி வட்டாட்சியர் தர்மராஜா கையூட்டு கேட்டு மிரட்டுவதால் உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai