Enable Javscript for better performance
ஜூலை 20-இல் குரூப்}1 தேர்வு: ஏற்பாடுகள் தயார்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு தருமபுரியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியரக அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

    தருமபுரியில் நடைபெறவுள்ள தேர்வை 4,494 பேர் எழுதுகின்றனர். இதற்கான தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுதுவோர் மையத்தினுள் கைப்பேசி, கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கடிகாரம் போன்ற தகவல் பரிமாற்ற உபகரணங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.

    தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க விடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், தேர்வர்கள் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

    தேர்வு மையங்கள் வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் மையங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai