Enable Javscript for better performance
துணை மருத்துவப் படிப்பு: 1251 விண்ணப்பங்கள் விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    துணை மருத்துவப் படிப்பு: 1251 விண்ணப்பங்கள் விற்பனை

    By தருமபுரி  |   Published on : 19th July 2014 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு 1251 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.

    அரசு மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகளான பி ஃபார்ம், பிஎஸ்சி நர்சிங், பிசியோதெரபி பட்டம், பிஎஸ்சி ரேடியாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி தொழில்நுட்பம் உள்ளிட்ட 8 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு வழங்க 1300 விண்ணப்பங்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வரப்பெற்றன.

    இந்த விண்ணப்பங்கள், கடந்த 7-ஆம் தேதி முதல் விடுமுறை நாள்களைத் தவிர, அனைத்து வேலை நாள்களில் வெள்ளிக்கிழமை வரை (ஜூலை 18) காலை 10 மணி முதல் மாலை 5 மணி கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் விற்பனை செய்யப்பட்டன.

    இதில், 49 விண்ணப்பங்களைத் தவிர, மீதமுள்ள மொத்தம் 1251 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai