Enable Javscript for better performance
நூலக ஆணைக் குழுவில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நூலக ஆணைக் குழுவில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

    By தருமபுரி  |   Published on : 19th July 2014 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்ட நூலக ஆணைக் குழுவில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு பொது நூலகத் துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியது.

    தருமபுரி மாவட்டப் பொது நூலகத் துறை அலுவலர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்

    கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.முனிராஜ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் சி.சரவணன், மாநிலத் துணைத் தலைவர் சு.மா.ரமேஷ், மாவட்டச் செயலாளர் பெ.பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    இந்தக் கூட்டத்தில், தருமபுரி மாவட்ட நூலக ஆணைக் குழுவில் நீண்டகாலமாக காலியாக உள்ள கண்காணிப்பாளர், கணக்கர், தட்டச்சர், இளைநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகியப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, வருகிற ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்க கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்வது, ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai