Enable Javscript for better performance
பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், பள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் குமார் (32). தொழிலாளி. இவர் அந்தப் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 36 வயதுடைய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினாராம்.

    இதுகுறித்து அந்தப் பெண், தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விரைவுத் தபால் மூலம் புகார் மனு அனுப்பினார்.

    இதையடுத்து, காவல் ஆய்வாளர் சந்திரகாந்தா விசாரணை செய்தார்.

    விசாரணையில், வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமாரை போலீஸார் கைது செய்தனர்.

    இந்தச் சம்பவம் குறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai