Enable Javscript for better performance
ரேஷன் அரிசியில் கலப்படம்: விற்பனையாளர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் அரிசியில் கலப்படம்: விற்பனையாளர் பணியிடை நீக்கம்

    By தருமபுரி  |   Published on : 19th July 2014 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ரேஷன் அரிசியில் கலப்படம் செய்ததாக வெள்ளிக்கிழமை விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    பென்னாகரம் ஒன்றியம், நாகாவதி அணை எர்ரப்பட்டி கிராமத்தில் நியாய விலைக் கடை உள்ளது. இந்தக் கடையில் சுமார்

    500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் குடிமைப் பொருள்களை வாங்கி வருகின்றனர்.

    இந்தக் கடையில் வெள்ளிக்கிழமை காலை குடும்ப அட்டை

    தாரர்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டது.

    இதில், பொதுமக்கள் வாங்கிய அரிசியில் யூரியா கலந்திருந்தது தெரிய வந்தது. இதனால், அந்த அரிசியை கடை விற்பனையாளரிடம் குடும்ப அட்டைதாரர்கள் திருப்பி ஒப்படைத்தனர்.

    மேலும், இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துவடிவேலுக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

    இதன்பேரில், அங்கு சென்ற அலுவலர்கள், கடையில் இருப்பு இருந்த அரிசி மூட்டைகளை சோதனை செய்து பார்த்த போது

    2 மூட்டைகளில் மட்டும் யூரியா கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, நியாய விலைக் கடை விற்பனையாளர் தேவியை மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துவடிவேல் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai