Enable Javscript for better performance
அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கியதாக தொழிலாளி கைது- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கியதாக தொழிலாளி கைது

    By அரூர்,  |   Published on : 20th July 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூர் அருகே அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரைத் தாக்கியதாக தொழிலாளியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேடைச் சேர்ந்த குப்பன் மகன் கோவிந்தன் (47). இவர் தருமபுரி - திருவண்ணாமலை வழித் தடத்தில் செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணிபுகிறார்.

    இந்த நிலையில், திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடேசன் மகன் முருகன் (54) பயணச்சீட்டு எடுக்காமல் நடத்துநரிடம் தகராறு செய்தாராம். இதையடுத்து, கரடித்தடத்தில் பேருந்தை நிறுத்தி முருகனை நடத்துநர் கீழே இறங்குமாறு கூறினாராம்.

    அப்போது, முருகனுக்கும் நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். தொடர்ந்து, நடத்துநரை முருகன் தாக்கினாராம். இதில், நடத்துநர் கோவிந்தனின் கால்பகுதியில் காயம் ஏற்பட்டது. இருவரையும் சமாதானம் செய்ய வந்த ஓட்டுநர் எச்.புதுப்பட்டியைச் சேர்ந்த காளியப்பன் மகன் மணிவண்ணனையும் (50) முருகன் தாக்கினாராம். இதையடுத்து, காயமடைந்த ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து அரசுப் பேருந்தின் நடத்துநர் கோவிந்தன் அளித்த புகாரின் பேரில், தொழிலாளி முருகனை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai