கல்லூரியில் விளையாட்டு விழா
By தருமபுரி, | Published on : 20th July 2014 03:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி தொன் போஸ்கோ கலை, அறிவியல் கல்லூரியில் 8ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஆ.சிலுவைமுத்து தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் விழாவைத் தொடக்கிவைத்தார். உடல்கல்வி ஆசிரியர் சேவியர் செனிஸ் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். விழாவில் தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிச் செயலர் அ.மரியசூசை, பிஎஸ்என்எல் கோட்டப் பொறியாளர் எம்.மகேஷ்வரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
கல்லூரி துணை முதல்வர் டேனியல் அம்புரோஸ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். பேராசிரியர் எம்.பெரியசாமி நன்றி கூறினார்.