Enable Javscript for better performance
சோமியனஹள்ளி டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சோமியனஹள்ளி டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

    By தருமபுரி  |   Published on : 20th July 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி- ஒகேனக்கல் சாலையில் சோமியனஹள்ளியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    சோமியனஹள்ளியில் மாநில நெடுஞ்சாலையோரம் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வருவோர்கள், மது அருந்திவிட்டு அந்தப் பகுதியில் உள்ள வயல் வெளிகளில் கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களை வீசிச் செல்கின்றனர்.

    இதனால், அந்தப் பகுதியில் உள்ள நிலங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையோரத்தில் மதுக் கடை உள்ளதால், அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.

    மேலும், மது போதையில் சிலர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளைச் சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு பல முறை புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

    மேலும், சிலர் தங்களது வீட்டின் முன் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தப் பகுதியில் உள்ள மதுபானக் கடையை வேறு பகுதிக்கு இடமாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai