Enable Javscript for better performance
பெண் தீக்குளித்து தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

     தருமபுரி அருகேயுள்ள அதியமான்கோட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அதியமான்கோட்டை அருகேயுள்ள பாளையம்புத்தனூரைச் சேர்ந்தவர் செல்வம். நூலஅள்ளி அரசுப் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (30). இவர்களுக்கு 2 பெண், ஒரு மகன் உள்ளனர்.

    இவர்களது பக்கத்து வீட்டில் செல்வத்தின் தம்பி ராமலிங்கம், அவரது மனைவி திலகா (21) வசித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தண்ணீர் பிடிப்பதில் விஜயலட்சுமிக்கும், திலகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் திலகா தாக்கப்பட்டாராம். இதையடுத்து, சனிக்கிழமை வீட்டில் இருந்த விஜயலட்சுமி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். பலத்த காயத்துடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.

    இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai