Enable Javscript for better performance
\\\"அம்மா\\\' உணவகக் கட்டுமான பணிகள்: அமைச்சர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் "அம்மா' உணவகக் கட்டுமானப் பணிகளை உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழக அரசு நகரப் பகுதிக்கு வரும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்க தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் "அம்மா' உணவகங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, தருமபுரி நகராட்சி சார்பில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், நகரப் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தலா 1,600 சதுர அடி பரப்பளவில் ரூ.25 லட்சம் மதிப்பில் "அம்மா' உணவகங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தருமபுரியில் இரண்டு இடங்களில் நடைபெற்று வரும் "அம்மா' உணவகக் கட்டுமானப் பணிகளை உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும், குறித்த காலத்தில் முடிக்கவும் அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், கோட்டாட்சியர் பி.மேனகா, நகர்மன்றத் தலைவர் ஜெ.சுமதி, நல்லம்பள்ளி ஒன்றியக் குழுத் தலைவர் முனுசாமி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai