Enable Javscript for better performance
ஏரியில் குதித்து பெண் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை அருகே உடல் நலக் குறைவால் பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஊத்தங்கரை அருகேயுள்ள தாண்டியப்பனூரைச் சேர்ந்தவர் அம்சவேணி (55). இவர் உடல்நலக் குறைவால் அவதியுற்றாராம். இதையடுத்து, அவர் கடந்த 17-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், ஊத்தங்கரை அருகேயுள்ள மல்லம்பட்டி ஏரியில் அம்சவேணி உடல் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உடல் நலக்குறைவால் விரக்தியில் அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

    இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai