Enable Javscript for better performance
ஒகேனக்கல் குடிநீர்: அனைத்துப் பகுதிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஒகேனக்கல் குடிநீர்: அனைத்துப் பகுதிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 21st July 2014 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, மாநிலச் சட்டத்திருத்தக் குழு உறுப்பினர் எம்.எஸ்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி முன்னிலை வகித்துப் பேசினார்.

    கூட்டத்தில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் வடக்கு, தெற்கு என இரு மாவட்டக் குழுக்களாக இருந்ததை ஒருங்கிணைந்த மாவட்டமாக அறிவித்து மாவட்டப் பொறுப்பாளரை நியமித்த கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவிப்பது. கட்சியின் தருமபுரி மாவட்ட அலுவலகக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் விடுப்பட்டுள்ள கட்சி உறுப்பினர் சேர்க்கைப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக, திமுக மாவட்டப் பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமையில் அந்தக் கட்சியினர் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பின்னர், மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த அந்தக் கட்சியினர் பேரணியாகக் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றனர்.

    கூட்டத்தில், மக்களவை முன்னாள் உறுப்பினர் ஆர்.தாமரைச்செல்வன், முன்னாள் எம்ஏக்கள் பி.என்.பி. இன்பசேகரன், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai