Enable Javscript for better performance
தருமபுரி மாவட்ட அதிமுக செயலருக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்ட அதிமுக புதிய மாவட்டச் செயலருக்கு அந்தக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.

    தருமபுரி அதிமுக மாவட்டச் செயலராக இருந்த பாலக்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழகனை, மக்களவைத் தேர்தல் தோல்வி காரணமாக அந்தக் கட்சியின் தலைமை அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கியது.

    இதையடுத்து, அதிமுக மாவட்டச் செயலாளராக நல்லம்பள்ளி ஒன்றியக் குழுத் தலைவர் பூக்கடை முனுசாமியை அந்தக் கட்சியின் தலைமை அறிவித்தது.

    இதையடுத்து, தருமபுரிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர், பெரியார், அண்ணா, அம்பேத்கர், எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து, கட்சி அலுவலகத்துக்கு வந்த அவருக்கு அந்தக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர், அவர் பேசியது:

    தருமபுரி மாவட்டச் செயலராக என்னை நியமித்த அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என்னை கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எந்த நேரத்திலும் சந்திக்கலாம்.

    கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றார் அவர்.

    அப்போது, உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், ஆவின் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய முன்னாள் தலைவர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai