Enable Javscript for better performance
திமுகவிலிருந்து நீக்கம்: உழைப்புக்கு கிடைத்த பரிசு- Dinamani

சுடச்சுட

    

    திமுகவிலிருந்து நீக்கம்: உழைப்புக்கு கிடைத்த பரிசு

    By அரூர்,  |   Published on : 21st July 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நேர்மையாக உழைத்த தொண்டனுக்கு கிடைத்த பரிசாக கட்சித் தலைமையின் நடவடிக்கையை கருதுகிறேன் என்று திமுகவிலிருந்து நீக்கப்பட்ட வ.முல்லைவேந்தன் தெரிவித்தார்.

    தருமபுரி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன், அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சனிக்கிழமை நீக்கப்பட்டார்.

    இதுகுறித்து அவர் கூறியது:

    கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் எனக்கு கட்சிப் பொறுப்பு இருந்தும் செயல்படாமல் முடக்கி வைத்திருந்தனர். தற்போது என்னைக் கட்சியில் இருந்து நீக்கியிருப்பதால், நான் சுதந்திரமாக செயல்படலாம்.

    கிருஷ்ணிகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் திமுகவை வளர்த்ததது நான்தான். பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் நான் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். என்னை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட திமுக நிர்வாகிகள்கூட இன்னும் கட்சியில் உள்ளனர். கட்சியில் உண்மைûயாக, நேர்மையாக உழைத்த தொண்டனுக்கு கிடைத்த பரிசாக இதைக் கருதுகிறேன். என் மீது திமுக தலைமை எடுத்துள்ள நடவடிக்கை காழ்ப்புணர்வால் எடுக்கப்பட்டதாகும்.

    நான் பெரியார், கலைஞரின் சுயமரியாதை பாசறையில் வளர்ந்தவன். வேறு எந்த அரசியல் கட்சிக்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணமில்லை என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai