Enable Javscript for better performance
புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க பாமக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க பாமக வலியுறுத்தல்

    By அரூர்,  |   Published on : 21st July 2014 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

    அந்தக் கட்சியின் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழா, பசுமை தாயக தினம் கொண்டாடடுவது குறித்து அரூர் ஒன்றிய அளவிலான கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், அந்தக் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ரா.அரசாங்கம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

    இதில், புதிய குடும்ப அட்டைகள் கோரி தருமபுரி மாவட்டத்தில் ஏரளமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 2011-ஆம் ஆண்டு முதல் இன்று வரை புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. புதியதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும்போது ஏற்கனவே உள்ள அட்டைகளில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படுகிறது. இதனால், கூட்டுக் குடும்பமாக இருந்து பெற்றோரின் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் ரேஷன் பொருள்களைப் பெற முடிவதில்லை. இதனால், கிராமப்புற ஏழை மக்கள் பாதிக்கின்றனர். எனவே, தருமபுரி மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பம் செய்துள்ள தகுதியான பயனாளிகள் அனை

    வருக்கும் விரைந்து வழங்க வேண்டும்.

    கல்விக் கடன்கள் கேட்டு வங்கிகளுக்கு செல்லும் கல்லூரி மாணவர்களை சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்கள் கேவலமான முறையில் நடத்துகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற வங்கி கடனுதவி விழிப்புணர்வு முகாமில் கூட அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. எனவே, கல்விக் கடன் பெறும் முறையில் மத்திய, மாநில அரசுகள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

    100 நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் அரூர் பெரிய ஏரியைத் தூர்வார வேண்டும். இந்த ஏரியில் படகு சாவாரி, மீன்களை வளர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பல்வேறு கிராமங்கள் விடுபட்டுள்ளன. எனவே, அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட தண்ணீர் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும்.

    மரம் நடுதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், புகையிலை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மாசுகளைக் கட்டுப்படுத்துதல், மழைநீர் சேகரிப்பைக் குறிக்கோளாகக் கொண்ட பசுமை தாயகம் தினத்தில் (ஜூலை 25) அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பொது இடங்களில் 5 ஆயிரம் மரக் கன்றுகளை நட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் ரா.வணங்காமுடி, மாவட்ட துணைச் செயலாளர் பெரியசாமி, ஒன்றியச் செயலாளர்கள் அல்லிமுத்து, சங்கர், ஒன்றியத் தலைவர் வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai