Enable Javscript for better performance
பெண் குத்திக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், அரூரில் மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாக கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன். கட்டட மேஸ்திரி. இவரது மனைவி சத்யா (27). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மாயக்கண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு நடைபெறுமாம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மாயக்கண்ணன், சத்யாவின் வயிறு, உடலின் பல்வேறு பகுதியில் கத்தியால் குத்தினாராம்.

    இதில் பலத்த காயமடைந்த சத்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, மாயக்கண்ணன் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai