லாரி மோதியதில் காய்கறி வியாபாரி சாவு
By அரூர் | Published on : 21st July 2014 03:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரூர் அருகே லாரி மோதியதில் காய்கறி வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அரூர் வட்டம், கம்பைநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணி மகன் மணிமாறன் (38). இவர் கம்பைநல்லூரில் தள்ளுவண்டியில் வைத்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 5.15 மணியளவில் தள்ளுவண்டியில் காய்கறிகளை வைத்துக் கொண்டு தள்ளிச் சென்றார். அப்போது, திப்பம்பட்டி - மொரப்பூர் சாலையில், கம்பைநல்லூர் பேரூராட்சி வளாகம் அருகே சென்ற போது, பின்புறம் வந்த லாரி தள்ளுவண்டி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மணிமாறன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச் சம்பவம் குறித்து அவரது மனைவி அமராவதி (29) அளித்த புகாரின் பேரில், கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.