Enable Javscript for better performance
அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்றவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்றவர் சாவு

    By தருமபுரி,  |   Published on : 22nd July 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரிமங்கலம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    தருமபுரி அருகேயுள்ள வாணியம்பாடியான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (45). தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளியான இவருக்கு ரத்னம் என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் பாலக்கோடு சென்று விட்டு சங்கர் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். காரிமங்கலம் அருகே மேக்லாம்பட்டி என்னுமிடத்தில் திங்கள்கிழமை வந்த போது கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai