Enable Javscript for better performance
கடத்தூர் அரசுப் பள்ளியில் சதுரங்கப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்கப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

    சதுரங்க விளையாட்டுத் திட்டத்தின் கீழ் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக, சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற பேரணி, சதுரங்க விளையாட்டுப் போட்டியை மாவட்ட உடல்கல்வி ஆய்வாளர் எம்.செல்வநாயகி தொடக்கி வைத்தார்.

    பள்ளித் தலைமை ஆசிரியர் டி.மோகன் தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. இந்தப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் சரக அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை உதவித் தலைமை ஆசிரியர் ஆர்.மணிமாறன், உடல்கல்வி இயக்குநர் கே.பாலமுருகன், உடல்கல்வி ஆசிரியர்கள் கே.மணிமாறன், டி.சதாசிவம், சிங்காரவேலன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai