Enable Javscript for better performance
சிறார் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிறார் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

    By தருமபுரி  |   Published on : 22nd July 2014 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் சமூகப் பாதுகாப்புத் துறையின் சார்பில் சிறார் தொழிலாளர் முறை, இளம் வயது திருமணம் ஆகியவற்றிற்கு எதிராக கலைக் குழு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கியது.

    இதை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தொடக்கி வைத்தார். இதில், கலைக் குழுவினர் பாடல், நடனம், நாடகம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். மேலும், குழந்தைகள் சார்ந்த சட்ட விதிகள் அடங்கிய விழிப்புணர்வு பிரசுரங்கள் அளிக்கப்பட்டன.

    இந்த பிரசாரப் பயணம் ஜூலை 22-இல் நல்லம்பள்ளி, 23-ஆம் தேதி பென்னாகரம், 24-ஆம் தேதி பாலக்கோடு, 25-ஆம் தேதி காரிமங்கலம், 26-ஆம் தேதி மொரப்பூர், 27-ஆம் தேதி அரூர், 28-ஆம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நாடகங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

    நிகழ்ச்சியில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கே.கல்யாணசுந்தரம், நன்னடத்தை அலுவலர் எம்.சிவகாந்தி, பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.சித்தார்த்தன், சி.சரவணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai