Enable Javscript for better performance
ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

    By தருமபுரி,  |   Published on : 22nd July 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளவதற்கான நிதியுதவி ரூ.20 ஆயிரத்தை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்தவ கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம், பெத்லஹேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம், கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கிய புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு ரூ.20 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

    இந்த புனிதப் பயணம் 2014, செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை 10 நாள்கள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள பிற்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெறலாம். மேலும், ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

    இதில், விண்ணப்பதாரர் தமிழகத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்களாகவும், 1.7.2014 தேதியில் குறைந்தபட்சம் ஓராண்டு செல்லதக்க பாஸ்போர்ட் உடையவராகவும் இருத்தல் வேண்டும். வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கான எவ்வித வில்லங்கங்களும் இருத்தல் கூடாது. மேலும், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள மருத்துவ, உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். பயணம் மேற்கொள்ள அரசு வழங்கும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் நீங்கலாக மீதமுள்ள தொகையை செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரை சேர்த்து அதிகபட்சமாக 4 நபர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இதில், 2 வயது நிறைந்த 2 குழந்தைகள் இருக்கலாம். ஏற்கெனவே, இந்த திட்டத்தின் கீழ் ஜெருசலேம் சென்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.

    திட்டப் பயனாளிகள், மாவட்ட வாரியாக உள்ள கிறிஸ்தவ மக்கள் தொகையின் அடிப்படையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் கூர்ந்தாய்வு குழுவினரால் தேர்வு செய்யப்படுவர்.

    இந்தப் புனிதப் பயணத்திற்கான காலம், பயண நிரல் ஜெருசலேம் புனித பயணக் குழுவினரால் முடிவு செய்யப்படும்.

    எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நிறைவு செய்த விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, 5-ஆவது தளம், அண்ணா சாலை, சென்னை 600 002 என்ற முகவரிக்கு வருகிற 31-ஆம் தேதி மாலை 5.45-மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai