Enable Javscript for better performance
திருமணத்துக்கு காதலன் மறுப்பு: விஷமருந்திய பெண் மருத்துவமனையில் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    திருமணத்துக்கு காதலன் மறுப்பு: விஷமருந்திய பெண் மருத்துவமனையில் அனுமதி

    By தருமபுரி,  |   Published on : 22nd July 2014 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : தருமபுரி அருகே திருமணம் செய்ய காதலன் மறுப்பு தெரிவிப்பதாகக் கூறி விஷமருந்திய இளம்பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்தார். அப்போது உடன் படித்த மதுரையைச் சேர்ந்த தீபக் (22) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டதாம்.

    இந்த நிலையில், கர்ப்பமுற்ற இளம்பெண் தன்னை திருமணம் செய்யுமாறு கூறினாராம். பெற்றோரிடம் சம்மதம் பெற்று திருமணம் செய்வதாகக் கூறிய காதலன், கர்ப்பத்தைக் கலைக்க வைத்தாராம்.

    சிறிதுகாலம் கடந்த நிலையில் தன்னை திருமணம் செய்யுமாறு மீண்டும் தீபக்கிடம் அந்தப் பெண் வற்புறுத்தினார். திருமணத்துக்கு வற்புறுத்தினால் செல்பேசியில் படம் பிடித்து வைத்துள்ள ஆபாசப் படத்தை வெளியிடுவேன் என மிரட்டினாராம்.

    இதனால் மனமுடைந்து கடந்த ஜூலை 19ஆம் தேதி விஷமருந்திய இளம்பெண்ணை பெற்றோர் காப்பாற்றி தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீபக்கை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai