Enable Javscript for better performance
நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்குப் பாராட்டு

    By தருமபுரி,  |   Published on : 22nd July 2014 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

    தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 30 மாற்றுத் திறனாளிகள் ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று 10 தங்கப் பதக்கம், 8 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களை பெற்றனர். மேலும், தனி நபர் சாம்பியன்ஷிப், சான்றிதழ்களையும் பெற்று சாதனைப் படைத்தனர்.

    இந்த மாற்றுத் திறனாளிகளை ஆட்சியர் கே.விவேகானந்தன் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், 2 பேருக்கு ரூ.7 ஆயிரம் மதிப்பில் ஊன்றுகோல், ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள், பிற்பட்டோர் நலத் துறை சார்பில் 3 பேருக்கு இலவச சலவைப் பெட்டி ஆகியவை வழங்கப்பட்டன.

    இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் டி.ஸ்ரீதர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம்.முத்தரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துவடிவேலு, துணை ஆட்சியர்கள் கிருஷ்ணன், சேதுமாதவன், குப்புசாமி, புதுவாழ்வுத் திட்ட மேலாளர் ஆர்.பத்மாமணி, மாற்றுத் திறனாளிகள் திட்ட அலுவலர் எஸ்.பாபு (பொறுப்பு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai