Enable Javscript for better performance
மனிதக் கழிவுகளை அகற்றுவோரை கணக்கெடுக்கும் பணி ஜூலை 28-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மனிதக் கழிவுகளை அகற்றுவோரை கணக்கெடுக்கும் பணி ஜூலை 28-இல் தொடக்கம்

    By தருமபுரி,  |   Published on : 22nd July 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி நகராட்சிப் பகுதியில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோரை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணி வருகிற ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

    மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் சார்பில் சுகாதாரமற்ற கழிப்பிடங்களில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோரைக் கணக்கெடுக்கும் பணி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெறவுள்ளது.

    சுகாதாரமற்ற கழிப்பிடங்கள், திறந்தவெளி கால்வாய்கள், கழிவுநீர் தொட்டிகள், ரயில்வே பாதைகளில் உள்ள மனிதக் கழிவுகளை சுத்தம் செய்தல், அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களைக் கண்டறிவதோடு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்தக் கணக்கெடுப்பில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தவறாது கலந்து கொண்டு தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பத்தினர் பற்றியும் முழுமையான தகவல்கள் அடங்கிய சுய உறுதிமொழிப் படிவத்தை அளிக்க வேண்டும்.

    இதுதவிர, மனிதக் கழிவுகளை கையாளும் வகையில் உள்ள சுகாதாரமற்ற கழிப்பிடங்களைக் கொண்ட வீட்டு உரிமையாளர்கள் அதிகாரிகள் குறிப்பிடும் காலக் கெடுவிற்குள் சுகாதாரமான கழிப்பிடங்களாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கணக்கெடுப்பு தொடர்பான தகவல்களை பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

    இதுதொடர்பாக, மேலும் தகவல்களுக்கு தருமபுரி நகராட்சி ஆணையாளரை 04342-260910 என்ற தொலைபேசி எண்ணிலும், ஸ்ரீர்ம்ம்ழ்.க்ட்ஹழ்ம்ஹல்ன்ழ்ண் 000ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai