Enable Javscript for better performance
அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது  கல்வீசிய வழக்கு: மேலும் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது  கல்வீசிய வழக்கு: மேலும் ஒருவர் கைது

    By  அரூர்,  |   Published on : 23rd July 2014 11:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வேன் மீது கல்வீசி தாக்கியது தொடர்பாக மேலும் ஒருவரை தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதியில் 3.4.2014-இல் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
     அப்போது, இரவு 8.45 மணியளவில் அவர் பெத்தூர் காலனிப் பகுதியில் வாக்கு சேகரித்த போது, அவரது பிரசார வேன் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில், வேனின் முன்பக்கக் கண்ணாடி சேதமடைந்ததுடன், ஓட்டுநர் பாபு காயமடைந்தார்.
     இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், பெத்தூரைச் சேர்ந்த முத்து மகன் மதியழகனை (45) உடனடியாக கைது செய்தனர்.
     தொடர்ந்து, இந்த வழக்கில் பெத்தூரைச் சேர்ந்த குப்பன் மகன் மாசிலாமணி (60), செல்லப்பன் மகன்கள் பிரசாந்த் (20), அன்பரசு (19) ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 5-க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருந்தனர்.
     இந்த நிலையில், இதில் தொடர்புடைய பெத்தூரைச் சேர்ந்த மாசிலாமணி மகன் ராசுக்குட்டியை (45) போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     மேலும், இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பெத்தூரைச் சேர்ந்த வைரப்பன் மகன் ஜெயகணேஷ், கந்தசாமி மகன் கார்த்திகேயன், ராஜி மகன் மணிவேல், அதே பகுதியைச் சேர்ந்த கா.மணிவண்ணன் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai