Enable Javscript for better performance
ஊதிய உயர்வு கோரி தொமுச ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத் துறை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி தொமுச சார்பில் தருமபுரியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டத் தலைவர் கே.அன்புமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.மணி, தொமுச பேரவைச் செயலாளர் வி.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இதில், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்.
     போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவை உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலே பணப் பலன்கள் வழங்க வேண்டும்.
     அரசுப் பேருந்துகளுக்கு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதைக் கைவிட வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
     அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரியங்களை அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
     இதில், தொமுச அமைப்புச்சார அணி தலைவர் கே.பழனி, தொமுச போக்குவரத்துப் பிரிவு பொறுப்பாளர் ஏ.சின்னசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai