ஊராட்சி ஒன்றியங்களில் நாளை நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்ட முகாம்
By தருமபுரி, | Published on : 23rd July 2014 11:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம், பசுந்தீவன அபிவிருத்தி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை (ஜூலை 24) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயனடையும் வகையில் நடைபெறும் முகாமில், கால்நடை பராமரிப்புத் துறையால் 2014-15-ஆம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள அரசு மானியத்துடன் கூடிய நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் அரசு மானியத்துடன் கூடிய பசுந்தீவனம் வளர்ப்புத் திட்டம், தெளிப்பு நீர்ப்பாசன கருவிகள் தேவைப்படும் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இந்த முகாமில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்க இருப்பதால் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.