Enable Javscript for better performance
ஏலச்சீட்டு மோசடி: பணத்தை  திரும்பத் தரக் கோரி நூதனப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஏலச்சீட்டு மோசடி: பணத்தை  திரும்பத் தரக் கோரி நூதனப் போராட்டம்

    By  தருமபுரி,  |   Published on : 23rd July 2014 11:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஅள்ளியில் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவரின் வீட்டு முன் பணத்தை திரும்பத் தரக் கோரி நூதனப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     மிட்டாரெட்டிஅள்ளியைச் சேர்ந்தவர் ரகு. இவரது மனைவி சித்ரா. இவர்கள் ஏலச்சீட்டு நடத்தி வந்தனராம்.
     இதில், ரூ. 50 ஆயிரம், ரூ.ஒரு லட்சம் உள்ளிட்ட தொகைக்கான மாதச் சீட்டு நடத்தி வந்த இவர்களிடம் தம்மனம்பட்டி, மாதேமங்கலம், மிட்டாரெட்டிஅள்ளி, லளிகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர்.
     இந்த நிலையில், கடந்த மாதம் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தியவர்களுக்கு உரிய தொகையைத் திருப்பித் தராமல் மோசடி செய்துள்ளனர்.
     இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், கடந்த ஜூன் 7-ஆம் தேதி ரகு, அவரது மனைவி சித்ரா, தந்தை பச்சமுத்து, உறவினர் தாளம்மா ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
     இந்த நிலையில், தற்போது ஜாமீனில் வந்துள்ள அவர்களிடம் தங்களது பணத்தைத் திருப்பித் தருமாறு பாதிக்கப்பட்டோர் மீண்டும் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர்கள் பணத்தை திரும்பித் தர மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
     இந்த நிலையில், ஏலச்சீட்டு நடத்திய உரிமையாளர் ரகுவின் வீட்டு முன், பணத்தை திரும்பித் தரக் கோரி சீட்டு செலுத்தியவர்கள் சமையலைச் செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது பணம் திரும்பக் கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai