Enable Javscript for better performance
ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    By  தருமபுரி,  |   Published on : 23rd July 2014 11:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு செவ்வாய்க்கிழமை மாலை நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
     கர்நாடக மாநில நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன.
     இதனால், கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்படுகிறது.
     இந்த நீர் கடந்த 18-ஆம் தேதி தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவிக்கு வந்தடைந்தது.
     இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஒகேனக்கல் அருவிக்கு 27 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து வந்துகொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை மாலை மேலும் நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
     இதனால் ஒகேனக்கல் அருவியில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, மணல் திட்டு ஆகிய பகுதிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
     இந்த நிலையில், கர்நாடக அணைகளிலிருந்து வரும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஒகேனக்கல் அருவிக்கு புதன்கிழமை காலை சுமார் 40 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து இருக்கும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
     குளிக்கத் தடை நீட்டிப்பு: ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் 5-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் ஓட்டவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி கரையோரமுள்ள காமராஜ் நகர், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai