Enable Javscript for better performance
காவலர்களிடம்  தகராறு செய்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரூர் அருகே காவலர்களிடம் மது போதையில் தகராறு செய்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     அரூர் வட்டம், கோட்டப்பட்டியைச் சேர்ந்த நடராஜன் மகன் பாண்டியன் (42). இவர் திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் கோட்டப்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் 4 பேருடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.
     அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் என்.சரவணன், சக்திவேல் ஆகியோர் அவரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறினராம். ஆனால், மது போதையில் இருந்த அவர் காவலர்களை தகாத வார்த்தையில் பேசினாராம். இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
     இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai